சோலிஸ் யான்மர் டிராக்டர்
இயந்திரமயமாக்கல் மூலம் விவசாயிகளின் உழைப்புச் சுமையை குறைக்கும் நோக்கத்துடன், யான்மர் 1912 ஆம் ஆண்டில் ஜப்பானில் நிறுவப்பட்டது. 1937 -இல் முதல் யான்மர் டிராக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், உலகம் முழுவதும் 20,000 -க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் யான்மர் ஒரு பெரிய உபகரண உற்பத்தியாளராக வளர்ச்சியடைந்துள்ளது.
யான்மர் தனது காம்பாக்ட் டிராக்டர்களுக்காகவும், பல முக்கிய OEM-களால் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மற்றும் கச்சிதமான என்ஜின்களுக்காகவும் மிகவும் பிரபலமான நிறுவனமாக விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டு ITL டிராக்டர்ஸுடன் கூட்டாண்மையை யான்மர் தொடங்கியது. இப்போது அது பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூரில் கூட்டு மேம்பாடு மற்றும் உற்பத்திக்கு முன்னேறியுள்ளது. ஜூலை, 2019 -இல் அதிக HP பிரிவில் சோலிஸ் யான்மர் டிராக்டர் அறிமுகப்படுத்தப்பட்டது முதல், தனது பிரிவில் வகுப்பில் சிறந்த டிராக்டர்களில் ஒன்றாக உருவாகியுள்ளது.