எங்களை
பற்றி

இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் இந்தியாவின் நம்பர் 1 டிராக்டர் ஏற்றுமதி பிராண்டாக பெருமையுடன் திகழ்வதுடன், நாட்டின் முதல் 3 முன்னணி டிராக்டர் உற்பத்தியாளர்களில் ஒன்றாகவும் உயர்ந்து நிற்கிறது. ITL, 20-120 HP -இல் டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களின் பரந்த போர்ட்ஃபோலியோ மூலம் உலகம் முழுவதும் உள்ள விவசாய சமூகத்திற்கு மிகவும் விரிவான விவசாயத் தீர்வுகளை வழங்குகிறது.

ITL -இன் முதன்மையான பிராண்டாக விளங்கும் சோலிஸ், வலிமை, நீடித்த உழைப்பு, சக்தி மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உலகின் முன்னணி டிராக்டர் பிராண்டுகளில் ஒன்றாகும். சோலிஸ் யான்மர் டிராக்டர் வரிசையின் கீழ் இந்திய விவசாயிகளுக்கு மலிவு விலையில் அதிநவீன ஜப்பானிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காக 100 ஆண்டுகள் பழமையான ஜப்பானிய டீசல் என்ஜின் நிபுணர்களான யான்மர் உடன் நாங்கள் இணைந்துள்ளோம்.

இந்த டிராக்டர் வரிசையானது, அதிநவீன 4WD தொழில்நுட்பம் மற்றும் எக்ஸ்பிரஸ் டிரான்ஸ்மிஷன் ஸ்பீடுகள் மூலம் விவசாயிகளுக்கு அதிக உற்பத்தியை உறுதி செய்வதால், சோலிஸ் யான்மர் 'உலகளாவிய 4 வீல் டிரைவ் டிராக்டர் எக்ஸ்பர்ட்கள்' என்ற புகழைப் பெற்றுள்ளது. நாட்டில் பண்ணை இயந்திரமயமாக்கல் வளர்ச்சியை ஊக்குவிக்க, உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நவீன யுகத் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கு சோலிஸ் யான்மர் உறுதி கொண்டுள்ளது. படிப்படியாக சோலிஸ் ஒரு இணையற்ற பிராண்டாகவும், 130 -க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கான அனைத்து எதிர்கால விவசாய மற்றும் வணிக பயன்பாடுகளுக்குமான ஒரே ஒரு தீர்வாகவும் மாறியுள்ளது.

உலகெங்குமுள்ள பெரும்பாலான குறிப்பிடத்தக்க சந்தைகளில் வலிமையான இருப்பைக் கொண்டுள்ள சோலிஸ், தற்போது ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் 4 வெவ்வேறு நாடுகளில் உள்ள சந்தைகளில் முன்னணி நிறுவனமாகவும், அதிகம் விற்பனையாகும் டிராக்டர் பிராண்டாகவும் விளங்குகிறது. பிரேசில் மற்றும் துருக்கியில் உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட டிராக்டர்களை வழங்கும் சோலிஸ், தற்போது லத்தீன் மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள 20 நாடுகளில் முன்னணியில் உள்ள ஒரே இந்திய நிறுவனமாக விளங்குகிறது. 33 ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் குறிப்பிடத்தக்க வகையில் தனது இருப்பை அதிகரித்து வரும் அதே நேரத்தில், ITL தனது டிராக்டர்களை அமெரிக்க சந்தையிலும் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

சோலிஸ் யான்மர், தி எகனாமிக் டைம்ஸின் “சிறந்த பிராண்டுகள் 2021” பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதுடன், இந்தியன் டிராக்டர் ஆஃப் தி இயர்'21 விருதுகளில் (ITOY) 'சிறந்த 4WD டிராக்டர்' விருதையும் Solis 5015 -க்காக வென்றுள்ளது. மேலும் ஃபார்ம் சாய்ஸ் விருதுகளில் தனது 3016 SN 4WD-க்காக சிறந்த டிராக்டர் >=30 ஹெச்பி வகை' விருதையும் வென்றுள்ளது.


100 ஆண்டுகளுக்கும் மேலாக புகழ்பெற்ற வரலாற்றுடன், எப்போதும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளையும் தாண்டி செயல்பட பெருமுயற்சி மேற்கொள்ளும் வேளையில், அசாதாரண தரத்துடன் கூடிய செயல்திறனை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஜப்பானிய டீசல் எஞ்சின் நிபுணர்களான யான்மர் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது. விவசாயம், தொழிற்துறை இயந்திரங்கள், கடல்சார், எரிசக்தி அமைப்பு போன்றவற்றில் டீசல் தொழில்நுட்பங்களில் விரிவான தீர்வுகளை வழங்கும் உற்பத்தியாளர்கள் மத்தியில், என்ஜின் மற்றும் ஹைபிரிட் தொழில்நுட்பங்கள், டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பங்கள், வெப்பப் பயன்பாடு மற்றும் எரிசக்தி மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் துல்லியமான கவனத்தை யான்மர் செலுத்துகிறது.

2016-இல், யான்மர் மிகவும் நிலையான, வளமான மறுசுழற்சி சமூகத்தை எதிர்நோக்கிய தனது புதிய பிராண்டு அறிக்கையை உருவாக்கியது: "நிலையான எதிர்காலம் - தொழில்நுட்பத்தின் மூலம் புதிய மதிப்பு", பல்வேறு மூலாதாரங்களில் இருந்து கற்றலை யான்மர் ஒருங்கிணைத்துள்ளது - பெரு நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் வரை - இது அனைவருக்கும் உண்மையான உலகளாவிய நிலையான சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு நிறுவனத்திற்கு உதவிகரமாக உள்ளது.

பார்க்கப் போனால், அது ஆயில் நுகர்வைக் குறைத்து, எதிர்கால சந்ததியினருக்காக அதை சேமித்து வைக்கும் தெளிவான நோக்கத்துடன், உலகின் முதல் சிறிய டீசல் இயந்திரத்தை வெற்றிகரமாக உருவாக்கிய யான்மரின் நிறுவனர் மாகோகிச்சி யமோகா ஆவா. யான்மரின் ஜப்பானிய தொழில்நுட்பத்தால் இயங்கும் அதிநவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனம், விவசாயிகளின் செயல்திறனை மேம்படுத்தவும், அவர்களின் செயல்திறன் மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கு உதவுகிறது.

தற்போது, யான்மரின் டீசல் என்ஜின்கள் பிவாவில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, யான்மர் டிராக்டர் வரிசைகள் 13 ஹெச்பி - 113 ஹெச்பி உள்ளிட்ட, விவசாய உபகரணங்கள் ஒகயாமாவில் உள்ள முதன்மை ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. ஜார்ஜியாவின் அடேர்ஸ்வில்லே மற்றும் தாய்லாந்தின் பாங்காக் ஆகிய இடங்களுக்கும் நிறுவனம் தனது டிராக்டர் அசெம்பிளி வசதிகளை விரிவுபடுத்தி வருகிறது.